Mr Namasivayam Balasshanmugam

(ஓய்வுபெற்ற கணக்காளர்)

Namasivayam Balasshanmugam

Date of Birth: 24 March 1941 - Deceased: 20 February 2024

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் களவில்பிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நமசிவாயம் பாலச்சண்முகம் அவர்கள் 20-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்,

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் - தெய்வானை தம்பதியினரிள் ஏகபுத்திரனும், காலஞ்சென்ற ஆ.ச சங்கரப்பிள்ளை - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-02-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில்  அன்னாரின் இல்லத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் மாதம்பிட்டி இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:- 

65/343, விஸ்ட்வைக் ரோட், 

காக்கைதீவு, மட்டக்குளி,

கொழும்பு -15.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

தரவு மூலம்:முகநூல் பக்கம் மற்றும் வீரகேசரி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2024 05:00)