திரு. நமசிவாயம் செல்வராசா (செல்லத்தம்பி)
தோற்றம்: 21 ஜூன் 1949 - மறைவு: 29 ஜூன் 2025
யாழ். காரைநகர் பாலகாட்டை பிறப்பிடமாகவும், அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நமசிவாயம் செல்வராசா அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளம்பலம் - இராசலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
யோகராசா, சுதர்சினி, மனோ ஆகியோரின் பாசமிக்க தகப்பனாரும்,
சாய்முகுந்தன், தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்மராசா (பாரிஸ்), காலஞ்சென்ற தியாகராஜா, இராசையா (பாரிஸ்), தேவராசா (இலங்கை), தங்கம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிவகாமசுந்தரி, காலஞ்சென்ற பரமலிங்கம், செல்வதி, சீவரத்தினம் (பாரிஸ்), சிவதேவி, நாகேஸ்வதி ஆகியோரின் பாசமிக்க மச்சானும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-07-2025 புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
