Miss. Namasivayam Thivanappillai (Kili)
Date of Birth: 25 February 1958 - Deceased: 01 October 2025
யாழ். கரவெட்டி வதிரியை பிறப்பிடமாகவும், வாரியத்தனை கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. நமசிவாயம் தெய்வானைப்பிள்ளை அவர்கள் 01-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூசகர் நமசிவாயம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் (நாகதம்பிரான் ஆலயம் -புளியம்பொக்கனை), புவனேந்திரன் (நாகதம்பிரான் ஆலயம் -புளியம்பொக்கனை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சீதாலட்சுமி, மல்லிகாஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கிருஷாந்தி, லக்கி, காலஞ்சென்ற முரளீதரன், துசிதா, லக்சிதா ஆகியோரின் அன்பு மாமியரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-10-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் சோனப்பு இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
