திரு. நமசிவாயம் யோகராசா
தோற்றம்: 13 மே 1949 - மறைவு: 30 ஜனவரி 2025
யாழ். காரைநகர் ஆயிலியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நமசிவாயம் யோகராசா அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் (ஓவசியர்) - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மூத்த மகனும்,
காலஞ்சென்றவர்களான யாழ்ற்றன் நடராசா - பாலாமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வடிவாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஜா, பாலகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லொக்லன் (Locklan), சப்னா (Sabna) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அஞ்சலி (Anjali), ஸ்கந்தா (Skanda) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 - 6:30 மணி வரை Asian Funeral care (35, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 13-02-2025 வியாழக்கிழமை நண்பகல் 12:00 - 2:00 மணி வரை Hendon Cemetery & Crematorium (Holders Hill Rd, London NW7 1NB, UK) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
