Mrs. Nanthini Sayanthan
Date of Birth: 24 November 1970 - Deceased: 21 July 2025
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - Bowmanville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நந்தினி சயந்தன் அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நடராஜா வைரமுத்து - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற மகாதேவன் இராஜரத்தினம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சயந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
கிஷான், ஆகாஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலைச்செல்வன் (சுரேஸ்- கனடா), ரமணன் (தினேஷ்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தாரணி கலைச்செல்வன், கனிஷ்டபிரியா ரமணன், சசிகலா பாஸ்கரன், சாயினி கிரிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெசிக்கா, மொனிக்கா, ஒலிவியா, தீபிகா, கீர்த்திகா, ஆனந், அஷ்மிதா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 28-07-2025 திங்கட்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
