Mr. Narayanapillai Yogendranathan

(Retired Assistant Post Master)

Narayanapillai Yogendranathan

Date of Birth: 14 July 1944 - Deceased: 29 December 2024

யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும்,  கிளிநொச்சி - திருவையாறு, வில்லுமதவடி நீர்வேலி தெற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாராயணபிள்ளை யோகேந்திரநாதன் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நீர்வேலியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை-இராசம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான முத்துவேலு-சிவக்கொழுந்து தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற முத்துமணி அவர்களின் அன்புக் கணவரும்,

எழிலி (யாழ் மாவட்ட கிராமிய கூட்டுறவு வங்கி), குறிஞ்சி (ஆசிரியை - கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்), மைதிலி (நிர்வாக உத்தியோகத்தர் - சிறுவர் நன்னடத்தை வட மாகாணம்), திலீபன் (Reecha Organic Farm), நீலாம்பரி (முகாமைத்தவ உத்தியோகத்தர் - நீர்ப்பாசன திணைக்களம், கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு தந்தையும்,

ராஜகரன் (இத்தாலி), தவராசா (தொழிலதிபர்), கவிநேசன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், நல்லூர்), சுகிர்தா, கரன் (ஆசிரியர் - கிளிநொச்சி மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துளசிதா (இ/கலைமகள் தமிழ் வித்தியாலயம்), நிஷாங்கன் (Reecha Organic Farm), சுலக்ஷன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்- யாழ். பல்கலைக்கழகம், அறிவியல் நகர்), பிரவின்ராஜ் (யாழ். இந்து கல்லூரி மாணவன்), கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களான - மருணிஷா, கோபிதா, நேசிகா, கிரிஷன், தபோதரன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது நீர்வேலி இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2024 05:00)