Mr Narayanasamy Gnanam

Narayanasamy Gnanam

Date of Birth: 06 October 1955 - Deceased: 06 February 2026

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து வெலிங்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாராயணசாமி ஞானம் அவ்ரகள் 06-02-2026 வெள்ளிக்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாராணயசாமி - மகாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற துரைசிங்கம் - புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,

சபேஷன், ஹார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவாஞ்ஜினி, கவிராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காவியா, ஆர்யன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

பார்ததேவி, இந்திராதேவி, சத்திவேல், கோகுலு, காலஞ்சென்ற சந்திராதேவி மற்றும் பத்மாசினி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ஜெயக்குமார், சிவாஜினி, பிரேம்குமார், ரவீந்திரகுமார் மற்றும் கீதாஞ்ஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/02/2026 05:14)