Mrs. Narayanasamy Magaleshwary
Date of Birth: 15 November 1939 - Deceased: 12 November 2024
கண்டி-கம்பளையைப் பிறப்பிடமாகவும், இல-198, வாசல வீதி, கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாராயணசாமி மங்களேஸ்வரி அவர்கள் 12-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சமர்சேட் எஸ்டேட் (கம்பளை) சேர்ந்த முத்து சேர்வை-குஞ்சரியம்பாள் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாராயணசாமி சேர்வை (வீரகேசரி தொழில் சங்க தலைவர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன் (சுவிஸ்), பூமதி, நவநீதன் (பிரித்தானியா), சுமதி (பிரித்தானியா), சிவசெந்தில் (பிரித்தானியா), விமலேஸ்வரன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு தாயாரும்,
பன்னீர்செல்வம் (சரணியா ஜீவலரி, வாசனா ஜீவலரி), பத்மநாகேஸ்வரன் (பிரித்தானியா), ஊசலா (சுவிஸ்), காஞ்சனா (பிரித்தானியா), பிரியதர்ஷினி (பிரித்தானியா), நதீரா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சனார்த்தன் (கனடா), பிரியந்தன் (பிரித்தானியா), அரிகரன், ஜீலியட்டா (சுவிஸ்), லௌரினா (சுவிஸ்), ஹெலேனா (சுவிஸ்), சர்வான் (பிரித்தானியா), கெவின் (பிரித்தானியா), திவேஷ் (பிரித்தானியா), கவிஷ் (பிரித்தானியா), லெனன் (பிரித்தானியா), அனிக்கா (பிரித்தானியா), பிரதிக்ஷா (பிரித்தானியா) ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 16-11-2024 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
