Mr. Narendrakumar Pirathapan
(Senior Manager City of Markham)
Date of Birth: 02 August 1958 - Deceased: 20 February 2025
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், Markham - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நரேந்திரகுமார் பிரதாபன் அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பிரதாபன் - கமலாவதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் - மகேஸ்வரி தம்பதியினரின் ஆசை மருமகனும்,
சாந்தினி (WSIB) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வெங்கட் (RBC Bank) அவர்களின் ஆசை அப்பாவும்,
சியாமளா (Myant), காலஞ்சென்ற மனோஜ்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவகணேஸமூர்த்தி (University of Toronto), கீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லாவண்யா, பிரார்த்தனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கனகரட்னம் அவர்களின் சகலையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-02-2025 திங்கட்கிழமை காலை 8:00 - 10:30 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
