திரு. மார்க்கண்டு அருமைத்துரை
(ஸ்ரீ லக்ஷ்மி ஸ்டோர்ஸ் - உரிமையாளர் (இல 40/1, Metro மெட்ரோ Tower, மலே வீதி. கொழும்பு-02))
தோற்றம்: 20 செப்டம்பர் 1945 - மறைவு: 11 ஆகஸ்ட் 2026
யாழ். வண்ணார்பண்ணை வடமேற்கு பெரியதம்பிரான் கோவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொம்பனித்தெரு, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு அருமைத்துரை அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவகங்கை அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாகரன், தாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காயத்திரி, குகபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருண்முகேஸ், கிருத்திகேஸ், ஹரிபூரணி, லக்ஷனா, அவிஷ்ணா ஆகியோரின் பாட்டனும்,
காலஞ்சென்ற குகதாசன் (பிரித்தானியா), சண்முகதாசன் (யாழ்ப்பாணம்), புஷ்பரஞ்சினி (பிரான்ஸ்), தவரஞ்சினி (கொழும்பு), தவமணி (யாழ்ப்பாணம்), முருகதாஸ் (மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வரஞ்சினி (பிரித்தானியா), செல்வதேவி (யாழ்ப்பாணம்), சிவானந்தமூர்த்தி (பிரான்ஸ்), பஞ்சாட்சரசிவம் (கொழும்பு), வீரகத்திப்பிள்ளை (யாழ்ப்பாணம்), கயல்விழி (மட்டக்களப்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-08-2026 புதன்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணி முதல் 07:00 மணி வரை மற்றும் 13-08-2026 வியாழக்கிழமை இன்று காலை 07:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை Jayaratne Funeral Parlour, Borella யில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 04:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
