திருமதி. நவமணி செல்லத்துரை

நவமணி செல்லத்துரை

தோற்றம்: 11 செப்டம்பர் 1956 - மறைவு: 28 பெப்ரவரி 2025

இந்தியா - திருச்சி மாவட்டம், இலுப்பையூர் கிராமம், (புசல்லாவ ஆனந்தா ஸ்டோர்ஸ்) செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவி திருமதி. நவமணி அவர்கள் 28-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று அதிகாலை  2.20 மணியளவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், மணியம்பட்டி கிராமம் காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை - சின்னப்பிள்ளை தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற மருதப்பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் மருமகளும்,

அமிஷா (கொழும்பு), தர்ஷி (கண்டி), ரவிசாஸ்திரி (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு தாயாரும்,

ரவிந்திரகுமார் (Pearl Tex - கொழும்பு), தினேஸ்குமார் (Dinesh Motors - கண்டி) ஆகியோின் மாமியாரும்,

அனன்யா, அகர்வின் ஆகியோரின் அன்பு அம்மாயியும்,

காலஞ்சென்றவர்களான வௌ்ளையன், மாணிக்கவாசகம் மற்றும் இராமன், இலட்சுமணன், மாரிமுத்து (), காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், செல்லம்மாள், சிவபாக்கியம் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் சகோதரியும்,

கணேஷன் பிள்ளை - கோமதி, காலஞ்சென்ற கணேஷன் பிள்ளை - புஸ்பவள்ளி ஆகியோரின் சம்பந்தியும்,

சிதம்பரம் (Savoy Jewellers - கொழும்பு), அழகுராணி ஜெகதபாலன் (Ceylon Forage - புசல்லாவ), பரமேஸ்வரி கிருபாகரன் (பண்டாரவளை) ஆகியோரின் அண்ணியும், 

உமாவின் ஓர்படியாளும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-02-2025 இரவு 8.00 மணி முதல் இல-25, பண்டாரநாயக்க பிளேஸ், புசல்லாவவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் புசல்லாவ பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.    

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/03/2025 05:00)