Mrs. Navamani Sellathurai
Date of Birth: 11 September 1956 - Deceased: 28 February 2025
இந்தியா - திருச்சி மாவட்டம், இலுப்பையூர் கிராமம், (புசல்லாவ ஆனந்தா ஸ்டோர்ஸ்) செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவி திருமதி. நவமணி அவர்கள் 28-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று அதிகாலை 2.20 மணியளவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், மணியம்பட்டி கிராமம் காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை - சின்னப்பிள்ளை தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்ற மருதப்பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
அமிஷா (கொழும்பு), தர்ஷி (கண்டி), ரவிசாஸ்திரி (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு தாயாரும்,
ரவிந்திரகுமார் (Pearl Tex - கொழும்பு), தினேஸ்குமார் (Dinesh Motors - கண்டி) ஆகியோின் மாமியாரும்,
அனன்யா, அகர்வின் ஆகியோரின் அன்பு அம்மாயியும்,
காலஞ்சென்றவர்களான வௌ்ளையன், மாணிக்கவாசகம் மற்றும் இராமன், இலட்சுமணன், மாரிமுத்து (), காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், செல்லம்மாள், சிவபாக்கியம் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் சகோதரியும்,
கணேஷன் பிள்ளை - கோமதி, காலஞ்சென்ற கணேஷன் பிள்ளை - புஸ்பவள்ளி ஆகியோரின் சம்பந்தியும்,
சிதம்பரம் (Savoy Jewellers - கொழும்பு), அழகுராணி ஜெகதபாலன் (Ceylon Forage - புசல்லாவ), பரமேஸ்வரி கிருபாகரன் (பண்டாரவளை) ஆகியோரின் அண்ணியும்,
உமாவின் ஓர்படியாளும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-02-2025 இரவு 8.00 மணி முதல் இல-25, பண்டாரநாயக்க பிளேஸ், புசல்லாவவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் புசல்லாவ பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
