Mrs. Navaneetham Jegathesan

(Founder, Nallur Siruvar Mandram, Former Head of Jaffna District - Cooperative Women Society, Former President of Social Development Foundation (NGO))

Navaneetham Jegathesan

Deceased: 20 July 2025

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட 'மழலைகளின் தாய்”, 'மாதரசி”, 'கலையரசி', 'கற்பக விருட்சம்', 'சமூக ஜோதி' திருமதி. நவநீதம் ஜெகதீசன் அவர்கள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை நல்லைக் கந்தன் காலடிகளைச் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை - ஜானகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. ஜெகதீசன் அவர்களின் அருமை மனைவியும்,

ஜெகந்தா (சூட்டி-அவுஸ்திரேலியா), ஜெய்கிஷன் (நோர்வே), ஜெய்ஹரன் (நோர்வே), ஜெய்ராம் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

சபிதா (கவிதா), தர்ஷ்மலா (நித்தா) ஆகியோரின் சீர்மிகு வளர்ப்புத் தாயாரும்,

பிருதிவிராஜ், மலர்விழி, எலிஸபெத், காலஞ்சென்ற அனுத்தமா, வாசுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுவாதிகா-கஜேந்திரா, ஜெய்விஷ்ணு, லக்ஷ்மி, சஞ்சுதா, ஹரினி, ஜெய்நீதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஸ்ரீநிதி, வித்யா, ஆயிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், சிவயோகம் மற்றும் செல்வரட்ணம் (செவ்வந்தி-கனடா), குணபூஷணம் (மல்லிகா-நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சிவசிங்கம், சிவசுப்பிரமணியம், எஸ்.பி இராஜா - நவநீதம், இரட்ணதுரை மற்றும் தனலக்ஷ்மி நாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் அந்திமக்கிரியைகள் 23-07-2025 புதன்கிழமை காலை 8:00 மணி முதல் அன்னாரது இல்லத்தில் (இல-363 நாவலர் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்) நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/07/2025 04:00)