Mrs. Navaneethapushparani Shanmugham
Date of Birth: 04 June 1942 - Deceased: 15 July 2025
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், கொழும்பு பம்பலபட்டியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவநீதபுஷ்பராணி சண்முகம் அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு - இலட்சுமிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகம் (Selvarajah & Co உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமார், ஷோபனா, தேவகுமார், சுரேஷ்குமார், பிரகலா, செந்தில்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பாரிஜாத புஷ்பராணி, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானகௌரி, காலஞ்சென்ற புவனேந்திரன், நர்மதா, சுபதா, சிவானந்தன், பிரஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஜந்தன், ஜானுஷா, ஷிரோமினா- சிவலக்ஷன், ஆகாஷன், சந்தோஷ், கணபதி, கிஷோர், அஞ்சிகா, மிதுன், நிதின், சிரேஷ்டன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:00 மணி முதல் A.F Raymond மலர்சாலை (115 D.s.Senanayake Mawatha, Colombo-8) எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
