திரு. நவரெத்தினம் சிவானந்தராஜா

நவரெத்தினம் சிவானந்தராஜா

தோற்றம்: 25 ஜூன் 1937 - மறைவு: 11 நவம்பர் 2025

யாழ். கொட்டடியைச் சேர்ந்தவரும், கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவருமான திரு. நவரெத்தினம் சிவானந்தராஜா அவர்கள் 11-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நவரெத்தினம் - நித்தியலட்சுமி தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,

கொக்குவில் கிழக்கு, ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்திலிங்கம் - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மனோரஞ்சிதம் (ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சஞ்சீவ், ஜெய்கிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மேரி திரேசா, நிசாங்கி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அறிவாளன், விஷ்ணு ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான நித்தியானந்தராஜா, துவாரகாதேவி மற்றும் நவானந்தராஜா, சந்திரலேகா, காலஞ்சென்ற ரதி, சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம் அவர்களின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2025 00:00)