திரு. நவரத்தினம் தர்மராசா (MGR அண்ணா)

நவரத்தினம் தர்மராசா (MGR அண்ணா)

தோற்றம்: 28 நவம்பர் 1948 - மறைவு: 18 ஆகஸ்ட் 2024

யாழ். காரைநகர் புதுறோட்டு மல்லிகையை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரத்தினம் தர்மராசா அவர்கள் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நீர்கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் (ஆசிரியர்)-தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் (மிருதங்க வித்துவான், வானிலை ஆராச்சி உத்தியோகத்தர்)-சவுந்தராம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுந்தராம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரணவன் அவர்களின் பாசமிகு தகப்பனாரும்,

தனு அவர்களின் அன்பு மாமனாரும் ,

சரன் அவர்களின் பாசமிகு அப்ப்பாவும்,

பாக்கியராசா (ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான ஶ்ரீகரலட்சுமி, லலிதா (அன்னம்), சாரதா மற்றும் கோகனதை (சுவிஸ்), நிர்மலாதேவி, அரிகரராசா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைக்காக புகழுடல் நீர்கொழும்பு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

முகவரி:-

55/2 மார்சல்ஸ் றோட், பள்ளஞ்சேனை

கொச்சிக்கடை, நீர்கொழும்பு.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/08/2024 04:00)