திரு. நவரத்தினசிங்கம் சுரேந்திரன்

(Director, Seagull Property Developers (Pvt) Ltd)

நவரத்தினசிங்கம் சுரேந்திரன்

தோற்றம்: 18 மே 1966 - மறைவு: 04 அக்டோபர் 2024

யாழ்.கரவெட்டி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரத்தினசிங்கம் சுரேந்திரன் அவர்கள் 04-10-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவரட்ணசிங்கம்-வேதநாயகி தம்பதியினரின் அன்பு மகனும்

காலஞ்சென்ற சோமசுந்தரம்-தணிகாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

யசோதா அவர்களின் அன்புக்கணவரும்,

ஹரிதர்ஷன் (ஹரி) அவர்களின் பாசமிகு தந்தையும்,

Dr. ஜனகன், ஜசோதா, காலஞ்சென்ற வாகீசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையும், 07-10-2024 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரையும் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/10/2024 04:00)