திரு. நவரத்தினம் முத்து சிவக்கொழுந்து

நவரத்தினம் முத்து சிவக்கொழுந்து

தோற்றம்: 25 அக்டோபர் 1945 - மறைவு: 27 நவம்பர் 2023

யாழ் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், அமெரிக்கா-பொஸ்டன், கனடா மொன்றியல், ரொறன்ரோ, வன்கூவர், ஒட்டாவா கனடா நகரங்களில் வாழ்ந்தவரும் Massachusetts Institute of Technology இல் பட்டம் பெற்றவரும், ஓய்வுபெற்ற Citi Bank கணனிப் பொறியியலாளருமான நவரத்தினம்  சிவக்கொழுந்து அவர்கள் நவம்பர் 27,2023ம் திகதி திங்கட்கிழமை அன்று கனடா ஒட்டாவில் காலமானார்.

அன்னார் பொன்னுத்துரை -சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மகனும்,
 
சுப்பிரமணியம் (சுப்ரமணியம் மருந்துக்கடை உரிமையாளர்) -செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,
 
துஷ்யந்தினி (ஜெயந்தி) அவர்களின் பாசமிகு தந்தையும்,
 
உதயன் (அலெக்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
 
நல்லநாதன்(இலங்கை), நாதன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
பாலேந்திரா (அமெரிக்கா), காலஞ்சென்ற இந்திரா, மகேந்திரா (இலங்கை), ஜெயராணி (இலங்கை), விஜயதேவி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
அஷ்விகா, அஷ்வினன், அம்சிகன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் டிசம்பர் 03,2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிமுதல் 9:00 மணிவரையும், டிசம்பர் 04,2023ம் திகதி திங்கட்கிழமை காலை 10:30 மணிமுதல் நண்பகல் 12:00 மணிவரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada இல் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து 12:00 மணிமுதல் 1:30 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada இல் பிற்பகல் 2:00 மணிக்கு தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/11/2023 22:55)