Mr. Navaratnam Sathiyamurthy

(ஓய்வுபெற்ற பௌதீகவியல் ஆசிரியர்)

Navaratnam Sathiyamurthy

Date of Birth: 09 June 1938 - Deceased: 20 April 2024

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணம் சத்தியமூர்த்தி அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான றொபேர்ட் நவரட்ணம் - அன்னம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,

துரையப்பா - செல்லம்மா தம்பதியினிரின் அன்பு மருமகனும்,

பகவதி (குட்டி அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியசுதன், சத்தியப்பிரியா, சத்தியலோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சொபாயா, மேவின், கரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Sarah, Timothy, Gldeon, Titus, Enoch ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சத்தியதேவி, கருணாதேவி மற்றும் சாந்ததேவி, தியாகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற ரூபி புஸ்பவதி மற்றும் ஜோர்ஜ் வைத்தியநாதன், ஜோகவா சபாநாதன், சத்தியநாதன், காலஞ்சென்ற நல்லையா, நவீனி, துரைசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 23-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழ் உடல் அராலி அமெரிக்கன் மிஷன் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2024 04:00)