திரு. நவரத்தினம் ஶ்ரீதரன்
மறைவு: 09 மே 2026
யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், அளவெட்டியை வதிவிடமாகவும், Swiss,Bern ல் வாழ்தவருமான அமரர் நவரத்தினம் ஶ்ரீதரன் (ஓய்வு நிலை Swiss Bern தமிழ் பாடசாலை பொறுப்பாளர் ஶ்ரீ) ANRV பழைய மாணவர் சங்கம் சுவிஸ் கிளை செயலாளர் அவர்கள் இன்று 09/05/2026 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார். காலஞ்சென்ற நவரத்தினம் சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் சிதம்பரேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,
நாகநந்தினியின் அன்புக் கணவரும்,
சுகன்யா, பிரமீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வராணி (ராணி சுவிஸ்),காலஞ்சென்ற ஶ்ரீபரன் (சின்னத்தம்பி) மற்றும் பாலராணி (பாலம்மா - இலங்கை), ஶ்ரீபாஸ்கரன் (கிளியன் - சுவிஸ்), உதயராணி (உதயம் - சுவிஸ்), பகீதரன் (பகீர் - லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கோணேஸ்வரன், சீதாரட்ணம் , தவக்குகன் , ரோகினி, குணசீலன், சயரூபி, சிவவதனி, சிவாஜினி, உதயகுமாரி, முகுந்தன், துளசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா ்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/05/2026 18:20)
