Mrs. Navaratnam Thangamma
Date of Birth: 09 August 1940 - Deceased: 24 November 2024
யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரட்ணம் தங்கம்மா அவர்கள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம்- அன்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
தேவிகா (கணக்காளர்), கிருபாகரன் (இலண்டன்), தர்மராஜா (இலண்டன்), பிரபாகரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகாதேவா (ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரி), கோமளாதேவி, துஷ்யந்தி, யுகாந்தினி ஆகியோரது அன்பு மாமியாரும்,
சுகந்தன், வசீகரன், நவீனேஷ், அபிமன்யு, அக்ஷயன், ஹரீஷா, பிரதீகா, பிரவீணா ஆகியோரின் பாட்டியும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், திரு. கனகசபை (எம்.எல்.ரி), திருமதி. பாலாமணி, திரு. கதிரவேலு, திருமதி கனகலெட்சுமி ஆகியோரது சகோதரியும் ஆவார்.
அன்னாரது புகழுடல் 01-12-2024 ஞாயிற்றக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-12-2024 திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முகவரி:-
K-77, ரொறிங்டன் தொடர் மாடி,
ரொறிங்டன் அவனியூ,
கொழும்பு-05.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
