Mr. Navaratnam Thirunavukkarasu

(Former Booking Clerk - Wellington, Lido Cinemas)

Navaratnam Thirunavukkarasu

Date of Birth: 13 February 1934 - Deceased: 23 April 2022

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். ஈச்சமோட்டை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் திருநாவுக்கரசு அவர்கள் 23-04-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், ஈச்சமோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற நவரட்ணம், அன்னம்மா தம்பதிகளின் இளைய புத்திரரும்,

அத்தியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற துரையப்பா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற முத்துராணி, முத்துமணி, பண்டிதமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலாதேவி (குஞ்சுமணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

விஜியராணி (கனடா), பத்மராஜ், பிரேமலா, பிரேம் (கனடா), சுதாகர், விஜயகுமார் (லண்டன்), ஜெயந்தி, ஜெயக்குமார், ஜெயசீலன், சிவகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வகுமார், வசந்தராணி, தேவமலர், அனுஷா, பிரகாஷ், ராஜி, சுகந்தினி, விஜயலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சரண்யா, அரவிந்த், அக்க்ஷயா, அகல்யா, அபிலாஷ், ஆயிஷ்மன், ரதன், ஹரணி, பத்மசாய், கபிஷயன், லோஜனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற நாகபூஷணி, நவரட்ணராஜா மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகசபாபதி, அன்னலட்சுமி ஆகியோரின் சகலனும்,

ஆர்யா அவர்களின் பூட்டனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 25-04-2022 திங்கட்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் மு.ப 08:00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 04:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/04/2022 11:02)