Mrs. Navaratnarajah Sabmani

Navaratnarajah Sabmani

Date of Birth: 03 August 1943 - Deceased: 07 April 2025

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல-90/1A, அரசடி வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினராஜா சபாமணி அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் - பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரத்தினராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

ராஜ்குமார் (USA), Dr. இந்திரநாத் (யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சர்வானந்தன்,காலஞ்சென்றவர்களான பங்கயச்செல்வி, சபாராணி, காந்திசொரூபன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தேவா (USA), Dr. கவிதா (யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தயானி, சச்சின், ஓவியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-04-2025 செவ்வாய்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் முற்பகல் 11:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/04/2025 00:19)