Mrs. Navaratnasingam Parashakthi
(English Teacher -Urumpirai Hindu College)
Date of Birth: 24 May 1928 - Deceased: 09 January 2024
யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வாழ்பதியாகவும் தற்போதைய கொழும்பை வாழ்விடமாகவும் கொண்டிருந்தவரும் ஆங்கில ஆசிரியை யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் கடமையாற்றி ஓய்வுபெற்ற திருமதி நவரட்ணசிங்கம் பராசக்தி அவர்கள் இன்று 09-01-2024ம் திகதி செவ்வாய்கிழமை கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரசாலை இளையதம்பி உரும்பிராய் காந்திமதி தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நவரட்ணசிங்கம் (பிரதம எழுதுநர் நீர்ப்பாசணத் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி கனகரட்ணம், பரமேஸ்வரி சோமாஸ்கந்தர், விஜயலஷ்மி, சந்திரமௌலீசன், யோகேஸ்வரன், நகுலேஸ்வரி ஸ்ரீதரன் மற்றும் கங்கமௌலீசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், சோமாஸ்கந்தர், நவமணி, பூலோகதிரவியம் மற்றும் திலகாம்பிகை, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கௌரீசன் (லண்டன்), லலிகரன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வற்சலா, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிஷா, நேருஷா, நிருஷா ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 11-01-2024ம் திகதி வியாழக்கிழமை காலை 8:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு முன்பகல் 10:00 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெற்று நண்பகல் 12:00 மணிக்கு பூதவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/01/2024 12:14)
