திருமதி. நேருஜி சியாமளா

நேருஜி சியாமளா

தோற்றம்: 27 பெப்ரவரி 1970 - மறைவு: 06 ஆகஸ்ட் 2024

கிளிநொச்சி  கனகபுரத்தை  பிறப்பிடமாகவும், லண்டன் Stone Bridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நேருஜி சியாமளா அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், வேதநாயகம் (மாதகல்)-புவனேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகளும்,

சின்னத்துரை-திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

நேருஜி அவர்களின் அன்பு மனைவியும்,

வனசா, ரெனிசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

கல்யாணி, விக்னேஸ்வரன், பரமேஸ்வரன், சிவகௌரி இவர்களின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00-12:45 மணி வரை Belmont Community Hall (Kenton Lane, Harrow HA3 8RY) இல் இறுதி கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00-3:00 மணியளவில் புகழுடல் Hendon Cemetery & Crematorium (Holders Hill Rd, London NW7 1NB) இல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/08/2024 04:00)