திருமதி. நேசமணி முருகேசு
மறைவு: 22 ஏப்ரல் 2025
யாழ். நவக்கிரி, புத்தூரைச் சேர்ந்த திருமதி. நேசமணி முருகேசு அவர்கள் 22-04-2024 செவ்வாக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நாகலிங்கம் (முன்னாள் வர்த்தகர் - புத்தூர்/ நவக்கிரி) தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராசையா (வர்த்தகர்), சுப்பிரமணியம், காலஞ்சென்ற பாலசிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற முருகேசு (முன்னாள் பொலிஸ் அதிகாரி) அவர்களின் ஆசை மனைவியும்,
சரஸ்வதி, பாலச்சந்திரன், கணேசலிங்கம், சந்திரவதனா, சந்திரமோகன் ஆகியோரின் அன்பு அன்னையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
