திருமதி. நிர்மலா (நிம்மி) மகாலிங்கம்

நிர்மலா (நிம்மி) மகாலிங்கம்

தோற்றம்: 07 மார்ச் 1972 - மறைவு: 02 மே 2026

யாழ். வட்டுக்கோட்டை, சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா - பிரம்ரன் மாநகரில் வாழ்ந்துவந்தவருமான திருமதி. நிர்மலா மகாலிங்கம் அவர்கள் கனடா – பிரம்ரன் நகரில் 02-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கெங்காதரன் - கனகம்மா தம்பதியினரின் ஆசைப் புதல்வியும். காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்துஜன், சுகன்ஜன், பிரியங்கா ஆகியோரின் பிரியமுள்ள தாயாரும், நிதர்சன் மற்றும் தாரணி ஆகியோரின் மாமியும்,

சிறிதரன், ராதிகா, மற்றும் சியாமளா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மோகன், முருகா, இராஜரட்ணம், சண்முகநாதன், பேரின்பநாயகம், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கிருபாகரன், விஜேந்திரன், தேவமனோகரி, இராஜலட்சுமி. சரஸ்வதி, வசந்தலோகினி, நிர்மலாதேவி, மீரா, காலஞ்சென்ற செல்வி (வதனா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பவீனா அவர்களின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணிவரை 30 Bramwin Court Suite D+E, Brampton, ON. L6T 5G2 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Brampton Crematorium & Visitation Centre மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பெற்று, பின்னர் மறுநாள் 11-05-2026 திங்கட்கிழமையன்று காலை 8.00 - 11.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/05/2026 00:00)