Mrs. Nirosha Anandkumar
Date of Birth: 11 April 1982 - Deceased: 08 May 2024
கொழும்பை வசிப்பிடமாக கொண்ட திருமதி. நிரோஷா ஆனந்தகுமார் அவர்கள் 08-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி மருதபிள்ளை - ஜெகதாம்பிகை (Duco Traders - Bandarawela) தம்பதியினரின் தவப்புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி நவரட்ணம் - அன்னலக்ஷிமி தம்பதியினரின் மருமகளும்,
திரு. ஆனந்குமார் (கண்ணா- Danisht Perfumery Works (Cavadi) அவர்களின் அன்பு மனைவியும்,
சாத்விக்கா, சௌரபி ஆகியோரின் அன்பு தாயாரும்,
இந்துஷா, நிஷான் ஆகியோரின் அருமை சகோதரியும்,
தினேஷ் கண்ணா, கௌரி மனோகரி (இந்தியா), பூபிகா ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற இராமையாபிள்ளை, வௌ்ளசாமிபிள்ளை பேத்தியும்,
பிரஷிகா, பியாக்தி, பிருதுமை ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
ஆதிதேவின் செல்ல அத்தையும்,
வர்சி, செந்தூரன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 10-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண (Restpect) VIP மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-05-2024 சனிக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் தகனக்கிரியைக்காக பொரளை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
