திருமதி. நிதர்ஷனா கிங்ஸ்டன்

நிதர்ஷனா கிங்ஸ்டன்

தோற்றம்: 22 நவம்பர் 1995 - மறைவு: 07 பெப்ரவரி 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Nova Scotia - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிதர்ஷனா கிங்ஸ்டன் அவர்கள் 07-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானம் - பத்மாவதி தம்பதியினர் மற்றும் காலஞ்சென்ற தெய்வேந்திரம் - நவமலர் தம்பதியினரின் அன்புப் பேத்தியும்,

ராஜசேகரம் - பிரதீபா தம்பதியினரின் அன்பு மகளும், துரைசாமி - ரஞ்சிதமலர் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கிங்ஸ்டன் அவர்களின் அன்பு மனைவியும்,

லியோன் அவர்களின் அன்புத் தாயாரும்,

நிதுஷன், தனுஷன், யாஷிகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரியந்தன்ரூபன், ரகுகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஜயசேகரன், பத்மசேகரன் ஆகியோரின் பெறாமகளும்,

விஜிதசிரோனி அவர்களின் மருமகளும்,

பிரபாகரன், ஜெயதீபன் ஆகியோரின் மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 - 10:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/02/2025 05:00)