திரு. நோபர்ட் நேரியஸ் பெர்ணான்டோ
மறைவு: 04 ஆகஸ்ட் 2025
"I have fought the good fight, I have finished the race, I have kept the faith"
இல-148, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு-13 யை வசிப்பிடமாகக் கொண்ட திரு. நோபர்ட் நேரிஸ் பெர்ணான்டோ அவர்கள் 04-08-2025 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கராஜா பெர்ணான்டோ - கிரேஸ் பெர்ணான்டோ தம்பதியினரின் மகனும்,
ரொஷாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷெனாலி, மெலனி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
ஜோசப் செல்வம் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆரோன்,எய்டன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
ஜொசப்பின், குமார், பியுனோ, ஆலோமா, ஜொனி, கிரேசியன், ஜெசிந்தா, ஜொய்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அன்றிவ், பிரையன், ரேனுகா, சுமதி, டிலானி, ரொஷானா, ஜோர்ஜ், டெரிக் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-08-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை மணி முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-08-2025 சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் கொட்டாஞ்சேனை சென். லூசியாஸ் பேராலயத்தில் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் சரீரம் பொரளை பொது மயான கத்தோலிக்க பிரிவில் நல்லடக்கம் செய்யப்படும்.
"இவரின் அன்பும் பாசமும் உறவுகளின் மீதான கருணையும் என்றென்றும் நிலைத்திருக்கும்."
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
