Mr. P. Nandagopal

P. Nandagopal

Date of Birth: 21 July 1953 - Deceased: 11 August 2024

நுவரெலியா-லிந்துலை இரத்னகிரிய ஜனபத (பாமஸ்டன் கொலனியை) வசிப்பிடமாக கொண்ட திரு. P. நந்தகோபால் அவர்கள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,

பாஸ்கரன், சுதாகரன், மேனகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேஸ்குமார், சுதர்சினி நிர்மலாதேவி (ஆசிரியை-நு/சமர்சட் தமிழ் வித்தியாலயம்), தமயந்தி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-08-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொட்டகலை கொமர்சியல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/08/2024 04:00)