திரு. P. ராமசாமி பிள்ளை
(T.R. Stores - உரிமையாளர், கம்பளை)
தோற்றம்: 22 நவம்பர் 1948 - மறைவு: 08 மார்ச் 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் சேருகுடி கிராமம் தேவங்குடையான் கோத்திரம் இல-18B, ஹில்ஸ் வீதி, கம்பளையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. பெரியண்ணன்பிள்ளை ராமசாமி பிள்ளை அவர்கள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியண்ணன்பிள்ளை - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சப்பாணியாப்பிள்ளை - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாந், பிருந்தா, காஞ்சென்ற கார்த்திகா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சதீஸ்குமார் (Lucky Hardware Stores, Colombo), கனகேஸ்வரன் (Japan), சரண்யா ஆகியோரின் மாமனாரும்,
அஞ்சனாவின் பாசமிக்க தாத்தாவும்,
பாலசுப்பிரமணியம், கணேசன் (Casio Textile), நாகம்மாள், காலஞ்சென்ற ராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கணேசன் (Wills Traders), பாலச்சந்திரன் (கொழும்பு), காலஞ்சென்றவர்களான தேவராஜ் சுப்ரமணியம், நடராஜ், கார்த்திகேசு ஆகியோரின் மாப்பிள்ளையும், காலஞ்சென்ற மூக்காயி (இந்தியா), ஜெகதாம்பாள், சந்திரலேகா ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பெரியசாமிபிள்ளை (இந்தியா), பெரியசாமிபிள்ளை (அலவத்துக்கொடை) மற்றும் சுப்பிரமணியம் (Kalpanas) ஆகியோரின் சகலையும்,
கிருஷ்ணமூர்த்தி - பரமேஸ்வரி (கொழும்பு), காலஞ்சென்ற சுப்பையாபிள்ளை - சாந்தி (கொழும்பு), காலஞ்சென்ற தங்கவேல்பிள்ளை - சரோஜினி (கம்பளை) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-03-2026 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் கம்பளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
