Mr. P. Ravichandran
(கொழும்பு AAron Trading உரிமையாளர்)
Date of Birth: 28 August 1968 - Deceased: 28 June 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் வீராணி கிராமம் (வலமுடையாள் கோத்திரம்) பிச்சைப்பிள்ளை ரவிச்சந்திரன் அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பண்டாரவளை முன்னாள் முத்தையா & Sons காலஞ்சென்ற பிச்சைப்பிள்ளை - ஞானேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், கொழும்பு செட்டியார் தெரு முன்னாள் மைதிலி ஜூவலர்ஸ் உரிமையாளர் காலஞ்சென்ற பழனிராஜ் - மல்லிகா தம்பதியினரின் மருமகனும்,
துர்க்கா அவர்களின் அன்புக் கணவரும்,
விஷ்வானின் அன்புத் தந்தையும்,
கோயம்புத்தூர் தேவிகா, சுதர்ஷன், காலஞ்சென்ற சந்திரன் ஆகியோரின் சகோதரரும்,
கோயம்புத்தூர் P.ரெங்கநாதனின் மைத்துனரும்,
ஸ்ரீ யாழினி, இந்துஜா ஆகியோரின் கொழுந்தனாரும்,
பாலசரவணனின் மாப்பிள்ளையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-06-2026 திங்கட்கிழமை காலை 7.30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
