திரு P. தியாகலிங்கம்

(LETCHIMI Pawn Brokers - Kotahena)

P. தியாகலிங்கம்

தோற்றம்: 19 மார்ச் 1958 - மறைவு: 27 மார்ச் 2024

பதுளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. P. தியாகலிங்கம் அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 3.20 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திருச்சி மாவட்டம் திண்ணணூர் கிராமம் காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளை (பதுளை) - பாலசரஸ்வதி தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையாபிள்ளை (Kandy Raja Stores) - சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும்,

சாந்தி அவர்களின் அன்புக்கணவரும், 

துஷாந்தன், அரவிந் ஆகியோரின் தந்தையும்,

ஞானசேகரன், மல்லிகா, காலஞ்சென்ற சந்திரசேகரன், தாமரைச்செல்வி, கிரஹலட்சுமி (சித்ரா), கணேசன், குமரகுரு ஆகியோரின் சகோதரரும்,

தியாகலிங்கம், தனலட்சுமி, லலிதா, காலஞ்சென்றவர்களான காஞ்சனா, கந்தா ஆகியோரின் மைத்துனரும்,

V.M.நவரத்தினம், காலஞ்சென்றவர்களான கனகராஜ், பெருமாள் ஆகியோரின் மைத்துனரும்,

புவனேஸ்வரி, தனுஜா, பிரபாவதி ஆகியோரின் கொழுந்தனாரும்,

சண்முகம் (மலேசியா), காலஞ்சென்ற ராஜரட்ணம், சுந்தரலிங்கம் ஆகியோரின் சகலையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல்  29-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணியிலிருந்து பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-03-2024 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் பொரளை பொது (புதிய) மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/03/2024 04:00)