திருமதி. பாக்கியலீலா முருகேசபிள்ளை
தோற்றம்: 20 ஆகஸ்ட் 1941 - மறைவு: 15 மார்ச் 2026
மலேசியாவைப்பிறப்பிடமாகவும், வர்த்தலைவிளான், நோர்வேயை (Hvam, Akershus) வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியலீலா முருகேசபிள்ளை அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை தனது 85வது வயதில் நோர்வேயில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், வர்த்தலைவிளானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தங்கராஜா - சௌபாக்கியவதி தம்பதியினரின் அன்பு மகளும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. பரமானந்தபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திரு. முருகேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கீதா (சுவிஸ்), கிறிஷான் (நோர்வே) மற்றும் விஜித்தா (சுவிஸ்), குமுதா (நோர்வே), யசோதா (பிரான்ஸ்), வினோதா (வன்கூவர், கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற காசிலிங்கம், திருமதி.தங்கலட்சுமி (ஆச்சி-கனடா), காலஞ்சென்ற காந்தலீலா, மற்றும் சுகலீலா (குஞ்சு – கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
