Mrs. Packiyam Poobalasingham

Packiyam Poobalasingham

Date of Birth: 05 January 1926 - Deceased: 26 May 2023

யாழ் நயினாதீவினைப் பிறப்பிடமாகவும், கொட்டடியையும், கொழும்பு வெள்ளவத்தையினையும் வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பாக்கியம் பூபாலசிங்கம் அவர்கள் இன்று 20-05-2023ம் திகதி வெள்ளிக்கிழமை காலை சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், 
 
காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற ஆர். ஆர். பூபாலசிங்கம் (ஸ்தாபகர், பூபாலசிங்கம் புத்தகசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற புவிராஜசிங்கம், ஸ்ரீதரசிங், விமலாதேவி, இராஜன் பூபாலசிங்கம், காலஞ்சென்ற பகவான், கார்ல் மார்க்ஸ், கல்யாணி, மல்லிகை, முல்லை ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கம்மா, காலஞ்சென்றவர்களான கந்தையா, சங்கரப்பிள்ளை, இராமலிங்கம், பொன்னம்மா, மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
சேகரன், நாகேஸ்வரி, மல்லிகாதேவி, சாந்தசொரூபி, பிரபானந்தா, சுபோதிஸ், தயானந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, தங்கரத்தினம் விஜயரத்தினம், அப்பாத்துரை, கணேசன் பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
பிரசன்னா, பிரதாபன்-வதனா, சுகன்யாசிவஜனன், இந்துஷன், ஹர்ஷன், பானு, பிருந்தன், விதூஷன், பிரியா-சந்திப், ஜெனா, ஷியான், ஜெயன், சஜன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
 
ஹரினி, ஆதி, அஷ்வி, மயுரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கொழும்பு, வெள்ளவத்தை உருத்தரா மாவத்தையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 29-05-2023ம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று அன்றைய தினம் பிற்பகல் தகனக்கிரியைக்காக  பொரளை பொது மயானத்துக் எடுத்துச் செல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர் (பூபாலசிங்கம் புத்தகசாலை)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/05/2023 23:32)