திரு. பகீரதன் முத்துக்குமாரசுவாமி

(Green Cite Wide Homes - உரிமையாளர்)

பகீரதன் முத்துக்குமாரசுவாமி

தோற்றம்: 20 ஜூலை 1969 - மறைவு: 18 நவம்பர் 2024

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பகீரதன் முத்துக்குமாரசுவாமி அவர்கள் 18-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசுவாமி (வர்த்தகர்- Sinayapillai & Sons, Colombo Srilanka உரிமையாளர்)-கமலா (A.O. Jaffna Srilanka) தம்பதியினரின் அன்பு மகனும்,

மாரிமுத்து மஹாலட்சுமி அவர்களின் வளர்ப்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு - புவனேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

துருவன் (Queen’s university), அனபாயன் (Queen’s university), அச்சுதன் ( U OF T) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கௌரி, ஆனந்தி, காலஞ்சென்ற உமா (ஆசிரியை- திருகோணமலை), துளசிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜ்குமார், பாலேந்திரா, துரைராஜரட்ணம், மதனிகா, தயாரஞ்சினி, தயாரங்கன் ஆகியோரின் மைத்துனரும்,

யோகரட்ணம், ரஞ்சினி ஆகியோரின் சகலனும்,

அபிராமி, சிவானி, சகானா, ஹரிஹரன், சரண்யா, சாம்சுகேஷ், மதுஷா, கிஷோர் ஆகியோரின் மாமனாரும்,

மான்ஷி, மிதுஷ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

அஜந்தன், தர்ஷினி, ஷாமினி ஆகியோரின் சித்தப்பாவும்,

லில்லியா அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-11- 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 7:00 - 10:00 மணி வரையும், 25-11- 2024 அன்று திங்கட்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில்புகழுடல் தகனம் செய்யப்படும்.

 வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2024 05:00)