திருமதி. பாக்கியம் கனகசபை

பாக்கியம் கனகசபை

தோற்றம்: 14 மார்ச் 1934 - மறைவு: 21 மே 2026

யாழ். கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியம் கனகசபை அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று டென்மார்க்கில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரையப்பா - சின்னாச்சி தம்பதியினரன் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற துரையப்பா கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான காங்கேசு, சதாசிவம், ஆனந்தம், மீனாட்சி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், 

ரவீந்திரநாதன், ராதாகிருஷ்ணரும், சுமதியும் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சர்மிளா - ரிபன், சயந்தன் - அபிராமி, சரண்யா - மிதுலன், பிரியந்தி அவினாஷ், நிசாந்தன் - நிவேதிதா, ஜனனி தர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஏய்டன், வள்ளி, அர்யுன், மேஹா, வீரா, யுவன், அயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-05-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 - 1.00 மணி வரை NORDRE KIRKEGAARD (​​8930 Randers NØ Denmark) இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/05/2026 00:00)