திருமதி. பாக்கியம் பரம்சோதி
தோற்றம்: 05 செப்டம்பர் 1937 - மறைவு: 26 ஜூன் 2026
"பேரன்பின் உருவமாய் வாழ்ந்து, இயற்கையோடு கலந்தார்"
யாழ். கரவெட்டி கிழக்கு, செங்குந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயில் நார்வீக், ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பாக்கியம் பரம்சோதி அவர்கள் 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் - சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடேசு - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரம்சோதி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செந்தூரன், மயூரன், மயூரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜியேந்திராவின் அன்பு மாமியாரும்,
ஆரணி, ஆதவன் அருண் ருத் ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மாலை 16:00 - 17:30 மணி வரை Solfjellshøgda Helsehus, Solfjellshøgda 23, 0677 Oslo எனுமிடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,06-07-2026 திங்கட்கிழமை அன்று காலை 8:30 - 11:30 மணி வரை Alfaset Crematorium (Nedre Kalbakkvei 99, 1081 Oslo) இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
