Mrs. Pakkiyam Seevarathinam
Date of Birth: 21 January 1932 - Deceased: 03 November 2025
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியம் சீவரத்தினம் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா - பத்தினி தம்பதியிரின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற எழுவையூர் முத்துச்சாமி - சிவகாமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சீவரத்தினம் (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கருணாநிதி (பிரித்தானியா), ஆனந்தி (கனடா), சகுந்தலாதேவி (கனடா), வரதராஜன் (பிரித்தானியா), காலஞ்சென்ற பூங்கோதை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஞானாவதி (பிரித்தானியா), சண்முகநாதன் (கனடா), தெய்வேந்திரம் (கனடா), தயாழினி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சின்னம்மா மற்றும் புஸ்பமணி (கனடா), காலஞ்சென்ற சரஸ்வதி, அரியரத்தினம் (இலங்கை), பரம்சோதி (கனடா), ஞானாம்பாள் (கனடா), திருநீலகண்டன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, மயில்வாகனம் மற்றும் இந்திரா (இலங்கை), ரஞ்சனி (கனடா), புவிராஜசிங்கம் (கனடா), ரூபி (கனடா), காலஞ்சென்றவர்களான இராசமணி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சயன், லதுஷா, கோகுலன், துளசி, சாருஜன், காலஞ்சென்ற அபிநயா, யொனதன், மெலனி, வேணுஷன், கஸ்தூரி, தனுஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லூக்காஸ், எமிலியா, அருவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6:00 - 9:00 மணி வரை Lotus Funeral and Cremation Centre Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 10-11-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11:00 - 12:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
