Mrs. Pakthaseetha Kanagalingam
Date of Birth: 09 November 1939 - Deceased: 23 July 2026
யாழ். கரந்தன் உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கரந்தன், சாவகச்சேரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடா - Scarborough யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பக்தசீதா கனகலிங்கம் அவர்கள் 23-07-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா - பாக்கியம் தம்பதியினரின் ஆசை மகளும்,
நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற சங்கரபிள்ளை கனகலிங்கம் (சிங்கர் கம்பனி முகாமையாளர் சாவகச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தம் அவர்களின் சகோதரியும்,
சிவராணி, குணபாலசிங்கம், காலஞ்சென்ற துரைராஜசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
யோகரஞ்சிதம், ஸ்ரீஸ்கந்தராஜா (அவுஸ்திரேலியா), ஜெயகலா (கனடா), சுரேந்திரராஜா (பிரித்தானியா), சுதர்ஷினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பிரபாகரன், பொன்மொழி, ரவீந்திரன், ஜெயசித்ரா, சிவயோகன் ஆகியோரின் மாமியாரும்,
சபேசன், நிரஞ்சனா, டர்சிகா ஆகியோரின் அத்தையும்,
பிரஷாந்த், லாவண்யா, ஆரன், ஆர்த்தி, தர்ஷா, சுஜன், ரஜினா, சஜன், சஜந்தா, லக்சிதா, கெளசிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரணவி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-07-2026 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 29-07-2026 புதன்கிழமை காலை 8:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+1 416 671 9310
www.tamilthakaval.org
