Mrs. Panchadcharam Maheswary

Panchadcharam Maheswary

Date of Birth: 17 July 1934 - Deceased: 24 November 2025

யாழ். ஈச்சமோட்டை விதானையார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பஞ்சாட்சரம் மகேஸ்வரி அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா - பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. கந்தவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற பஞ்சாட்சரம் அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, பத்மாவதி, கமலரம்பிகை, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலாம்பிகை (சுவீடன்),  பிரேமதாசன், ஜீவதாசன், ரவீந்திரன், சுஜாதா, சுரேந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

காலஞ்சென்ற பத்மநாதன், ஞானசேகரம், அமிர்தவதனி, அம்பிகா, பகீரதி, மேகலை ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரதீபா, பிரதீபன், பிரவீனா, அஜித்தா, அக்ஸ்சன், ரிஸ்வினி, அபிராம், நிதர்சனா, ஸ்ரீராம், தர்வின் ஆகியோரின் பேத்தியாரும்,

அஸ்வினா (சுவீடன்), ஜெய்வின், அஞ்சனா, இனியா, அமிரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அஞ்சலிக்காக 3955 Chemin de Ia Cote-de-Liesse, St Laurent,Quebec,H4N 2N6  இல் அமைந்துள்ள Urgel Bourge Funeral Home இல் 29-11-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 12:00 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் நடைபெற்று நன்பகல் 1:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2025 03:13)