Mrs. Pandithar Mangayarkarasi Nadarasa

Pandithar Mangayarkarasi Nadarasa

Deceased: 21 October 2024

யாழ். காரைநகர் களபூமி விளானை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பண்டிதர் மங்கையற்கரசி நடராசா அவர்கள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம்-இராசம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற கந்தையா [ஓய்வுபெற்ற ஆசிரியர்]-சிவகாமசுந்தரி தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா [அதிபர்- ஹாட்லிக் கல்லூரி] அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்ற சிவபாதவிருதயர் [ஆசிரியர்], பண்டிதர்  புனிதவதி [ஆசிரியர்], சுந்தரமூர்த்தி [மொழி பெயர்ப்பாளர்- அவுஸ்திரேலியா], அருள்நந்தி [பொறியியலாளர்-அவுஸ்திரேலியா], மருத்துவ கலாநிதி சிவனேஸ்வரி [அவுஸ்திரேலியா] ஆகியோரின் சகோதரியும்,

ஞானசம்பந்தன் [அவுஸ்திரேலியா], சிவமலர் [அவுஸ்திரேலியா], சிவனருட்செல்வன் [ஆசிரியர்], சிவசக்தி [ஆசிரியர்] ஆகியோரின் தாயாரும்,

மாலினி [அவுஸ்திரேலியா], சிவபாதம் [அவுஸ்திரேலியா], சிவமங்கை [ஆசிரியர்], தர்மலிங்கம் [பிரதி கல்விப் பணிப்பாளர்- தீவக வலயம்] ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவக்கொழுந்து, சிவரஞ்சனி [அவுஸ்திரேலியா], மருத்துவ கலாநிதி சாலினி [அவுஸ்திரேலியா], ஈஸ்வரன் [கணக்காளர்- அவுஸ்திரேலியா]  ஆகியோரின் மைத்துனியுமாவர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/10/2024 04:00)