திருமதி. பஞ்சலிங்கம் அழகேஸ்வரி
தோற்றம்: 25 டிசம்பர் 1954 - மறைவு: 23 நவம்பர் 2024
திருமதி. பஞ்சலிங்கம் அழகேஸ்வரி அவர்கள் 23-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவராசா-பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு புதல்வியும்
காலஞ்சென்ற இராசதுரை-திரவியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
வாணிகா, சுதர்சன், வேணுகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜிதாஸ், ரோஷான், சுயிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அதிசயா, அர்ஷதா, அனோஜன், அர்சனா, துருவன், மேகனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
புவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவனேசன், தங்கேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின்பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 27-11-2024 புதன்கிழமை அன்று நண்பகல் 12:30 - 2:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ONL3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து பிற்பகல் 3:30மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ONL0H 1G0) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
