திரு. பரமலிங்கம் கந்தசாமி மகாதேவா

(இளைப்பாறிய மாவட்ட தபாலக அதிபர்)

பரமலிங்கம் கந்தசாமி மகாதேவா

தோற்றம்: 30 ஆகஸ்ட் 1943 - மறைவு: 03 ஜூலை 2024

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தினைப் பிறப்பிடமாகவும், தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கலாபூசணம், பரமலிங்கம் கந்தசாமி மகாதேவா அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற உயர்திரு. பரமலிங்கம் கந்தசாமி (நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய ஆதி பரம்பரை தர்மகர்த்தா)-நயினை வரகவி நாகமணிப்புலவரின் சிரேஷ்ட புதல்வி காலஞ்சென்ற நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், 

நயினாதீவு காலஞ்சென்ற திரு.திருமதி சிவலிங்கம்-அன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிமலினி (சுவிஸ்), பிரேமானந்தா (ஜேர்மனி), சிவாஸ்கந்தா (லண்டன்), துஷித்தா (கஜனி-அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயகுமாரன் (சுவிஸ்), கேதாரகௌரி (ஜேர்மனி), நிலானி (லண்டன்), தினேஷ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுவேதிகா-விதுஷிகன், சுஷ்மிதா, சாஜினி, அர்ஜீன், அனுஷ்கா, ஆன்யா, அர்விந்த், கிருஷ்ணி, கிஷோர் ஆகியோரின் அன்பு பேரனும்,

விஹானின் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கனகாம்பிகை, கனகசபாபதி (ஆசிரியர்,பரம்பரை அறங்காவலர் சபை உறுப்பினர், நாகபூசணி அம்பாள் ஆலயம்), குகதாசன் (வட்டாரகல்வி அதிகாரி), கமாட்சிசுந்தரம் (அதிபர்), சவுந்தரம், பராசக்தி, மகாலிங்கம் (பிரதம எழுதுவினைஞர்), கண்ணன் மற்றும் கமலாம்பிகை (சங்கீத ஆசிரியை), காலஞ்சென்ற இராசரெத்தினம் (பிரதம சுங்க அதிகாரி), லலிதாம்பாய் (ஆசிரியை), பரமலிங்கம் (முன்னாள் செயலாளர்-வட கிழக்கு மாகாண பொது நிர்வாக ஆணைக்குழு, தலைவர்-அறங்காவலர் சபை, நாகபூசணி அம்பாள் ஆலயம்), காலஞ்சென்ற ஞானசுந்தரம் (அதிபர்), வைத்திய கலாநிதி நவரட்ணராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற நவநீதகிருஷ்ணனின் (வருமானவரி அலுவலர்) மைத்துனரும்,

காலஞ்சென்ற குமாரவேலு, கோகிலாம்பாள், காலஞ்சென்ற பார்வதி, கனகம்மா, கணபதிப்பிள்ளை, பாலசுந்தரம், நீலாம்பிகை, புவனேஸ்வரி, காலஞ்சென்ற செல்வலிங்கம், நாகேஸ்வரி, காலஞ்சென்ற கணேசு, கமலாதேவி, காலஞ்சென்ற சாந்தினி, மங்களேஸ்வரி, கலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

மீனாட்சியின் உடன்பிறவா சகோதரரும்,

சுப்பிரமணியம்-கனகாம்பிகை, பத்மநாதன்-குகராஜவதி, குழந்தைவேலு-மகேஸ்வரி, கிருபாகரன்-செல்வராணி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-07-2024 திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/07/2024 04:00)