திரு பரமநாதன் கிருஸ்ணகுமார்
தோற்றம்: 22 டிசம்பர் 1955 - மறைவு: 26 பெப்ரவரி 2024
யாழ். காரைநகர் அறுகம்புலத்தைப் பிறப்பிடமாகவும், 56/1, 5ம் ஒழுங்கை, சம்பியன் வீதி, கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமநாதன் கிருஸ்ணகுமார் அவர்கள் 26-02-2024 திங்கட்கிழமை அன்று அதிகாலை இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதன் - மகாலட்சுமி (கல்கமுவா) தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கோசலா, மாதவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருஸ்ணதாசன், காலஞ்சென்றவர்களான சாந்தகுமாரி, மீனகுமாரி மற்றும் விஜயகுமாரி, கிருஸ்ணரூபன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
முகவரி:-
56/1, 5ம் ஒழுங்கை,
சம்பியன் வீதி,
கொக்குவில் கிழக்கு, கொக்குவில்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தரவு மூலம்:- முகநூல்
www.tamilthakaval.org
