திரு பரமநாதி கேசவராசா
மறைவு: 25 நவம்பர் 2026
நயினாதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து மற்றும் கனடாவை வதிவிடங்களாகவும் கொண்ட திரு. பரமநாதி கேசவராசா (கேசா) அவர்கள் இன்று 25.11.2026 புதன்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார் என்ற துயரச் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனையும் ஆழ்ந்த கவலையும் அடைகின்றோம்.
அன்னாரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், அவரை நேசித்த அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது.
அன்னாரின் பிரிவால் ஆறாத்துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அன்னாரை நேசித்த அனைவருக்கும் நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் – பிரித்தானியா சார்பில் எமது இதயபூர்வமான ஆழ்ந்த அனுதாபங்களையும் துயரப் பகிர்வையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இத்துயர்மிகு வேளையில் அன்னாரின் குடும்பத்தினரது துயரில் எமது கழகமும் மனமாரப் பங்கெடுத்துக் கொள்வதுடன், இப்பேரிழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும் ஆறுதலையும் எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு அருள வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் நித்திய சாந்தியும் பேரின்பமும் பெற்று இளைப்பாற நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளை மனமுருகிப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி… ஓம் சாந்தி… ஓம் சாந்தி...
ஆழ்ந்த இரங்கலுடன்,
நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் – பிரித்தானியா
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/11/2026 20:15)
