திரு. பரமசாமி மயில்வாகனம் (மகேஸ்)

பரமசாமி மயில்வாகனம் (மகேஸ்)

தோற்றம்: 18 டிசம்பர் 1943 - மறைவு: 09 மே 2025

யாழ். மீசாலை கிழக்கு மத்திய வீதியைப் பிறப்பிடமாகவும், துணுக்காய், இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமசாமி மயில்வாகனம் அவர்கள் 09-05-2025 வௌ்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி - மங்கையற்கரசி தம்பதியினரின் பாசமிகு மகனும்,

துணிக்காயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (முன்னாள் கிராம சேவையாளர்) - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பாக்கியலட்சுமி (இலண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் (முன்னாள் தபாலதிபர் - துணுக்காய்), தனபாலசிங்கம் (துணுக்காய்) மற்றும் விஜயலட்சுமி (மீசாலை), விஜயரட்ணம் (நோர்வே), யோகநாதன் (பதிவாளர் - துணுக்காய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரவணபவன் (நோர்வோ, கிரிதரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனராணி (நோர்வே), அனுஷியா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜொனதன், கெவில், யூலியா (நோர்வே), பிரவீன், நவ்யா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இலண்டனில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/05/2025 04:00)