திருமதி. பரமசிவம் செல்வரத்தினம்

பரமசிவம் செல்வரத்தினம்

தோற்றம்: 14 மே 1941 - மறைவு: 20 செப்டம்பர் 2025

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 2ம் யூனிட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமசிவம் செல்வரத்தினம் அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - செல்லாச்சி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

உதயனன் (அமுதன்- பிரான்ஸ்), உதயசீலன் (உதயன்- மாவீரர்), வெண்ணிலா (நிலா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குமுதினி (பிரான்ஸ்), பிரகாஷ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரட்சனா, ராதயன் (பிரான்ஸ்), கயல் (இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜான்வி அவர்களின் அன்புப் பூட்டியும்,

நவரத்தினம், தங்கரத்தினம், காலஞ்சென்றவர்களான வைரகப்பிள்ளை, மகாலிங்கம், சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் முரசுமோட்டையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கீரிமலை வீதி மாவிட்டபுரம் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2025 04:00)