Mrs. Paramenthiram Kemeshwary
Date of Birth: 27 November 1937 - Deceased: 27 November 2022
யாழ். அச்சுவேலி சன்னதி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பரமேந்திரம் கேமேஸ்வரி அவர்கள் 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் பரமேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ரயுகுமார்(இளைப்பாறிய பொறியலாளர், SLT ), வசந்தினி, நந்தகுமார்(லண்டன்), சுமதினி(கனடா), ஆனந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கேமேந்திரன், ரவீந்திரன், யதீந்திரன், தியாகேந்திரன், கைலேஸ்வரி, ராஜயோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மலோஜினி, பரமேஸ்வரன், சத்தியா, சுரேந்திரன், மேரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கீர்ணா, நிவேதா, பிறிந்தன், ஷாமுஹி, வஜிதா, அஜன், ஆரணி , அருணன், கஜீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆகவி, ஏரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-11-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பொரல்லை ஜயரத்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு மு.ப 11:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் பொரல்லை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- பிள்ளைகள், மருமக்கள்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2022 23:38)
